பக்கம்:இசைத்தமிழ்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 சொல் வழிபாடு என்னும் பொருளிலும் வழங்கப்படுவ தாயிற்றென்பதும் மேல் எடுத்துக்காட்டிய குறிப்புக்களால் நன்கு புலனுதல் காணலாம். 'இணேகொ ளேழெழு நூறிரும் பனுவல் ஈன்ற வன் திருநாவினுக் கரையன்' எனவரும் தொடரால் சுந்தரமூர்த்தி சுவாமிகளே திரு நாவுக்கரசர் பாடிய திருப்பதிகங்களின் தொகையினைக் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார். நின்றியூர் மேயாரை நேயத்தாற் புக்கிறைஞ்சி ஒன்றியவன் புள்ளுருகப் போற்றுவர ருடையவர சென்றுமுல் கிடர் நீங்கப் பாடிய வேழெழுது றும் அன்று சிறப் பித்தஞ்சொற் றிருப்பதிகம் அருள் செய்தார். (பெரிய ஏயர்கோன்-150) எனவரும் பாடலில் சேக்கிழார் நாயனர் சுந்தரர் கூறிய தொகையினை விளக்குதல் காண்க. ‘ஏழு எழுநூறு இரும்பனுவல்' என்னும் இத்தொடர், நாலாயிரத்துத் தொளாயிரம் பதிகம் என்றே பொருள்படு வதாகும். இவ்வாறே நம்பியாண்டார் நம்பியும் பதிகம் ஏழெழுநூறு பகருமா கவியோகி' எனத் திருநாவுக்கர சரைப் போற்றுமுகத்தால் அரசர் பாடிய திருப்பதிகங்கள் ஏழு எழுநூறு அஃதாவது நாலாயிரத்துத் தொளாயிரம் என்றே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் திருஞானசம்பந்தர் 1600 பதிகங்களும் திருநாவுக் கரசர் 4900 பதிகங்களும் சுந்தரர் 3800 பதிகங்களும் பாடியருளினர்களெனவும் அம் மூவரும் அருளிச் செய்த திருப்பதிகங்களின் தொகை 10300 எனவும் அவற்றின் பாடற்ருெகை 103000 எனவும் திருமுறைகண்ட புராணத் தால் இனிதுபுலனும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/74&oldid=745129" இலிருந்து மீள்விக்கப்பட்டது