பக்கம்:இசைத்தமிழ்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8.2 தெண்ணியறிதற்குரிய கட்டளை யோசை பற்றியும் பகுத்துக் கூறியுள்ளார். இருசீரடி, குறளடி: முச்சீரடி, சிந்தடி; நாற் சீரடி நேரடி; ஐஞ்சீரடி நெடிலடி, அறுசீர் முதலாக வரும் அடிகள் கழிநெடிலடி எனப்படும். இங்ங்னம் சீர்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்த அடிகள் சீர்வகை படிகளாகும். இனி நாற்சீர்களால் ஆகிய அளவடிகளையே ஒற்றும் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் நீக்கி நாலெழுத்து முதல் ஆறெழுத்துவரை யமைந்த அடிகள் குறளடி எனவும், ஏழெழுத்து முதல் ஒன்பதெழுத்தளவும் அமைந்த அடிகள் சிந்தடி எனவும், பத்தெழுத்து முதல் பதின்ைகெழுத்தளவும் அமைந்த அடிகள் நெடிலடி எனவும், பதினெட்டு முதல் இருபதெழுத்தளவும் அமைந்த அடிகள் கழிநெடிலடி என வும் ஆசிரியர் தொல்காப்பியனர் ஐவகையடிகளாகப் பகுத் துள்ளார். இங்ஙனம் எழுத்தெண்ணி வகுக்கப்பெற்ற ஐவகை யடிகளையும் கட்டளையடிகள் என வழங்குதல் மரபு. ஒற்று நீக்கி எண்ணுங்கால் எல்லா அடிகளும் எழுத்தொத்து வரும் கலிப்பாவினைக் கட்டளைக் கலிப்பா எனவும், நெடிலடி நான்கிளுல் எழுத்தொத்துவரும் கலித்துறையினைக்கட்டளைக் கலித்துறை எனவும், இவ்வாறே கட்டளையாசிரியம் கட்டளை வஞ்சி எனவும் வழங்கும் வகைகள் எழுத்தளவாகிய கட்டளை யோசைபற்றிப் பிற்காலத்தார் பகுத்துரைத்தனவே யாகும். இயற்றமிழில் சீர்வகைபற்றிச் செய்யுட்களின் அமைப் பினைப் பகுத்துணர்தல் எளிது. இசைத் தமிழில் ஒர் எழுத்து மிகினும் குறையினும் இசையமைப்புக்குரிய தாளம் முதலியன மாறுபடும். ஆதலால் நெடில் குறில் ஆகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/89&oldid=745145" இலிருந்து மீள்விக்கப்பட்டது