பக்கம்:இசைத்தமிழ்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லக் கருதியவற்றைக் கேட்போர் உள்ளம் மகிழ இனிய ஓசையோடு கூடிய இசைத்திறத்தால் புலப்படுத்தும் மொழிநடை இசைத் தமிழ் எனச் சிறப்பித்துரைக்கப்படும். தம் எண்ணங்கள் தமது உடம்பிற் காணப்படும் மெய்ப்பாடு முதலியவற்ருல் வெளிப்பட்டுப் புறத்தார்க்குப் புலனுக நடித்துக் காட்டுதற்கு ஏற்றவாறு அமைந்த மொழிநடை நாடகத் தமிழென வழங்கப்படும் எப்பொருளையும் தெளிவாக எண்ணியறியும் உள்ளத் தின் இயல்பினை வளர்த்தற்குரிய மொழியமைப்பினை இயற் தமிழ் என்றும், கேட்போர் உள்ளத்தினைக் குளிரச் செய்யும் இன்னுேசை மிக்க உரையின் இயல்பினை இசைத்தமி ழென்றும், மக்கள் சொல்வன அவர்களது உடம்பிற்ருேன்றும் மெய்ப்பாடுகளால் பிறர்க்குப் புலப்படும்படி அமைந்த மொழி நடையினை நாடகத்தமிழென்றும் மிகப்பழைய காலத்தி லேயே தமிழ் முன்ளுேர் வகுத்துள்ளனர். மாந்தர் தங்கள் உடம்பின் செயலால் விளங்கிக் கொண்டவற்றை உரை யினுல் பிறர்க்கு அறிவுறுத்தவும் பிறர் உரையிஞல் அறி வித்தவற்றைத் தம் உள்ளத்தால் உய்த்துணரவும் துணை செய்யும் கருவியாகத் தமிழ்மொழி அமைந்தமையால் அதனை முத்தமிழ் என்ற பெயரால் முன்னையோர் வழங்கு வாராயினர். ஆசிரியர் தொல்காப்பியனுர் காலத்திற்கு முன்னரே முத்தமிழ்த்திறம் பற்றிய இலக்கண நூல்கள் பல இருந்தன. அவை எழுத்து, சொல், பொருள் என்னும் இயற்றமிழ் மாத்திரத்தோடு அமையாது இசையிலக்கணங் களும், கூத்திலக்கணங்களும் விரவிய அமைப்பில் முத் தமிழ் இலக்கணங்களாக அமைந்திருந்தன. ஆசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/9&oldid=745146" இலிருந்து மீள்விக்கப்பட்டது