பக்கம்:இசைமணி மஞ்சரி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்தப் பெயரிலே, எந்த உருவத்திலே உள்ளம் ஈடுபடு கிறதோ அந்த காமத்தை, அந்த வடிவத்தை என்றும் மறவாது இடையருது.பக்திசெய்து கசிந்துருகி கின்று வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள முற்படவேண்டும். அதற்கு இசைப்பாடல்கள் சாலவும் உதவி புரிகின்றன. இம்முயற்சியிலே எழுந்த பாடல்கள்தான் பெரும்பாலும் எனது கீர்த்தனைகள். ஒரு கீர்த்தனை என்ருல் அது ஒரு கோபுரம் போன் றது என்பது என் கருத்து. வெளிப்படும்போதே இசை வடிவமான அடிப்படையும், முக்கியமான கட்டுக்கோப்பு களும், தாங்கி வந்துவிட்டால் பிறகு சங்கீத வித்வான் கள் அந்தக் கட்டுக்கோப்பைக் கலைக்காமல், கோபுரத் திலே பலப்பல சிற்ப வடிவங்கள் அமைப்பதுபோலத் தமது மனுேபாவத்திறமையால் பல இசைச் சிற்பங்களை உண்டாக்கி அதை மேலும்மேலும் அழகுபடுத்தி மெரு. கேற்றி ஜீவனும் கலைப்பண்பும் கிறைந்ததாகச் செய்து விடுவார்கள். அப்படிச் செய்கின்றபோது உணர்ச்சிப் பெருக்கும், கருத்தாழமும், சொல் கயமும் கொண்ட பாடல்கள் அமரத்துவம் எய்திவிடுகின்றன ; கேட் போருக்கும் பெருவிருந்தாக அமைகின்றன. சங்கீத வித்வான் உயர்திரு. என். சிவராம கிருஷ்ண்ய்யரை இசைத்துறைக்கு என் குருவாக நான் கொண்டிருக்கிறேன். அவரோடு பத்து ஆண்டுகள் கூடவே இருந்து இசையிலே ஊன்றி கிற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதல்ை ஒருவர் உள்ளத்தை மற்ருெருவர் நன்கு அறிந்துகொண்டு உருப்படிகளின் ஸ்வரக் குறிப்புகளைப் பலமுறை மாற்றிச் செப்பனிட்டு, இருவருக்கும் திருப்தி ஏற்படும்வரை சலியாதுழைக்கச் செய்தது இறைவனின் தோன்ருத் துணையேயாகும். இசை என்கின்ற பெருங்கடலிலே சுமார் 40 ஆண்டுகள் மூழ்கியிருக்கிறேன். ஆனல் சுண்டுவிரல் ஆழம்கட்ட நான் உள்ளே புகவில்லையென்பதை நான் இப்போது உணர்கின்றேன். தமிழ்க்கலைக்களஞ்சியப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைமணி_மஞ்சரி.pdf/10&oldid=745158" இலிருந்து மீள்விக்கப்பட்டது