பக்கம்:இசைமணி மஞ்சரி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணிக்கு என்.வாழ்க்கையில் பெரும் பகுதியை மகிழ்ச்சி யோடு அர்ப்பணம்செய்துவிட்டதால், எஞ்சியுள்ளஒழிவு நேரங்களிலே என் உள்ள்த்திற்கு மிகவும் மகிழ்ச்சி யூட்டக கூடிய இசைக்கும், இசைப்ப்ாடலுக்கும், கவிதைக்கும் மற்ற இல்க்கிய்ப் படைப்புகளுக்கும் பங்கிட்டுக் கொண்டேன். சாந்தியைக் கொடுக்கக் கட்டியதும் ஆன்மிகத் துறையிலே இறைவன்பால் இட்டுச் செல்வதுமான சாதனங்களில் இசை முக்கிய மானது. நாளாக நாளாக இதை கான் நன்கு உணர்ந்து வருகின்றேன். சொந்த அனுபவங்களைப் பற்றி இதற்கு மேல் விவரிக்க நான் விரும்பவில்லை. எனது இசைப்பாடல்கள் நான்கு தொகுதிகளாக ஸ்வர, தாளக் குறிப்புகளுடன் முன்பே வெளிவந்துள் ளன. அவையெல்லாம் இன்று கிடைப்பதற்கு அரிதாகி விட்டமையால் அவற்றுள் ஒரு சில பாடல்களை மட்டும் இங்கு தொகுத்திருக்கிறேன். புதிதாக அமைத்த ஏழு பாடல்களும் சேர்ந்துள்ளன. சங்கீத கலாநிதி உயர்திரு செம்பை வைத்தியநாத பாகவதர், சங்கீத கலாநிதி உயர்திரு ஜி. என். பாலசுப்ரமணியம், இசைப் பேரறிஞர் உயர்திரு எம். எம். தண்டபாணிதேசிகர் இவர்களின் உதவியால் மூன்று பாடல்கள் இசை உருவம் பெற்றன. சங்கீத வித்வான் உயர்திரு கும்பகோணம் எஸ். விஸ்வ காதன், சங்கீத வித்வான் உயர்திரு டி. கே. கோவிந்த ராவ் ஆகிய இருவரும் எனக்கு அரிய யோசனைகளைக் கடறி என் இசைக் கலை முயற்சியிலே உதவி செய்த தோடு, ஒன்றிரண்டு இசை உருவத்தை வகுப்பதிலும் எனக்கு உதவியுள்ளனர். ஆனல் என் குருங்ாதருக்கே இப்பணியில் நான் பெரிதும் கடமைப்பட்டவன். சிறந்த சங்கீத வித்வான்கள் பலரும் என் பாடல் களை மதித்துப் போற்றி எனக்கு ஊக்கம் அளிப்ப தானது இறைவன் செயல் என்றே கருதுகிறேன். இவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியும் வணக்கமும் உரித்தாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைமணி_மஞ்சரி.pdf/11&oldid=745169" இலிருந்து மீள்விக்கப்பட்டது