பக்கம்:இசைமணி மஞ்சரி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனமுருகி வாயாரப்பாடியுள்ளார்கள். வர்ணம், கீர்த் தனம், பதம் ஜாவளி, தில்லானு முதலான வகைகளாக இயற்றியிருக்கிருர்கள். சாஹித்யங்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படியாக எளிய, அழகான் தமிழில் அம்ைங் திருப்பதைப் போற்றவேண்டும். இசை அம்ைப்பு, வர்ண ம்ெட்டுகள் தனித்தன்மையுடன், ராக பாவம், லயம் எல்லாம். தெளிவான முறையில் அமைத்துப் பாடியுள் ளார்கள். திரு. தூரன் அவர்களது குருநாதரான திரு. சிவ ராமகிருஷ்ணய்யர் அவர்களுக்கும் இவருக்கும் உள்ள குரு சிஷ்ய பாவம் சாஹித்யமும், இசை அமைப்பும் அழகாக அமைந்திருப்பதன் மூலம் அறிந்துகொள்ள 6ÜITLO. திரு. தூரன் அவர்களால் இயற்றப்பட்ட இசை நூல்கள் இதற்குமுன் நான்கு தொகுதிகள் வெளிவந் துள்ளன. இந்த ஐந்தாம் தொகுதி இசைமணி மஞ்சரி. என்ற பெயருடன் வெளியாகின்றது. இதில் 50 இசை வகைகளைத் தொகுத்துள்ளார்கள். இதில் உள்ள ஒவ் வொரு கீர்த்தனையையும் நான் பாடிப் பார்த்தேன். பாடு வதற்குச் சொல் நயத்துடனும் சாஹித்யம் உள்ளத் தைத் தொடும் பக்திப் பெருக்குடனும், இசை அமைப்பு, ராகபாவம், தாள அமைப்பு வெகு கச்சிதத்துடனும், எளிதாக எல்லோரும் பாடம் செய்து பாடக்கட்டிய முறையிலும் அம்ைந்துள்ளது என்பதை மகிழ்ச்சி யுடன் கூற விரும்புகிறேன். இத் தொகுதியில் காணப்படும் 50 உருப்படிகளி லும் மிகவும் பிரசித்தமாக வழங்கிவரும் ராகங்களே பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன. இவை தவிர வந்தன தாரிணி, தேசிய ரஞ்சினி, விலாசினி, போக வஸந்தம் என்ற நான்கு அழகான அபூர்வ ராகங்களும் இருக் கின்றன. இவை பாடுவதற்கு சுலபமான நல்ல ரக்தி உள்ள அபூர்வ ராகங்கள் என்பதை மகிழ்ச்சியுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைமணி_மஞ்சரி.pdf/7&oldid=745322" இலிருந்து மீள்விக்கப்பட்டது