பக்கம்:இசையமுது 1, 1984.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தூய்மை தூய்மை சேரடா தம்பி-என் சொல்லை நீ பெரிதும் நம்பித் தூய்மை சேரடா தம்பி! வாய்மையாலும் ஒழுக்கத்தினாலும் அகத் தூய்மை உண்டாகும் மேலும் மேலும்! தூய்மை சேரடா தம்பி? உடையினில் தூய்மை-உண்ணும் உணவினில் தூய்மை-வாழ்வின் நடையினில் தூய்மை-உன்றன் இசையமுது நல்லுடற் றூய்மை-சேர்ப்பிள் தடையில்லை வாழ்நாள் ஒவ்வொன்றும் இன்பம் தரும்நாள் ஆகும் நீ என்றும். தூய்மை சேரடா தம்பி! துகளிலா நெஞ்சில்.- சாதி துளிப்பதும் இல்லை- சமயப் புகைச்சலும் இல்லை - மற்றும் புன்செயல் இல்லை!- தம்பி! அகத்திலே அன்பின் வெள்ளம் மூளும்; தீய அச்சம் போகும்! நீ எந்நாளும் தூய்மை சேரடா தம்பி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/21&oldid=1443335" இலிருந்து மீள்விக்கப்பட்டது