பக்கம்:இசையமுது 1, 1984.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நெஞ்சுக்கு நீதி சூதும் வாதும் நிறைந்த பூதலமீது நல்லார் ஓதும் வழி நடந்தால் யாதும் துயரமில்லை ஏதும் சந்தேகம் உளதோ- நெஞ்சே இதிங் தீது சிறிதும் உளதோ? சாதி சமயக்கடை வீதியின் அப்பால் ஒரு சோதி அறிவிற் சரி நீதி விளங்கும் அதைக் காதினில் தினம் கேட்பாய்-நெஞ்சே இந்த மேதினி தனை மீட்பாய். இசையமுது கூழுமில்லாது நாட்கள் ஏழும் பசித்துன்பமே சூழும்படியே பிறர் தாழும் நிலை தவிர்க்க வாழும் முறைமை சொல்வார்-நெஞ்சே நல்லார் பாழும் இருளைக் கொல்வார். மேழி யுழவன் பாட்டும், கோழியின் ஆர்ப்பும் கேட்டாய் ஆழியிற் கதிர் ஏறும் நாழிகை யாயிற்றே வாழிய மனப்பாவாய்— அறிஞர் காட்டும் ஊழியம் செயப் போவாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/37&oldid=1443354" இலிருந்து மீள்விக்கப்பட்டது