பக்கம்:இசையமுது 1, 1984.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் பகுதி தமிழன் தாயின் மேல் ஆணை! தந்தை மேல் ஆணை ! தமிழக மேல் ஆணை! தூய என் தமிழ் மேல் ஆணையிட்டே நான் தோழரே உரைக்கின்றேன். நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார் நலிவதை நான் கண்டும், ஓயுதல் இன்றி அவர்நலம் எண்ணி உழைத்திட நான் தவறேன். தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன் தாய் தடுத் தாலும் விடேன் எமை நத்துவா யென எதிரிகள் கோடி இட்டழைத் தாலும் தொடேன். "தமக்கொரு தீமை" என்று நற்றமிழா எனை அழைத்திடில் தாவி இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நாள் இனிதாம் என் ஆவி! மானமொன்றே நல் வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த என் மறவேந்தர் பூனைகள் அல்லர்; அவர்வழி வந்தோர் புலி நிகர் தமிழ் மாந்தர். ஆன என் தமிழ் ஆட்சியை நிறுவ அல்லல்கள் வரின் ஏற்பேன்! ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக் குவப்புடன் நான் சேர்ப்பேன். 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/42&oldid=1443349" இலிருந்து மீள்விக்கப்பட்டது