பக்கம்:இசையமுது 1, 1984.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பத் தமிழ் இன்பந் தருந்தமிழில் அன்பு பிறந்ததுண்டு. துன்பம் இனியுமுண்டோ சொல் சொல் சொல் பகையே! முன்பு துருப்பிடித் திருந்த படைக்கலமாம் முத்தமிழ் ஒளி அறிந்து செல் செல் செல் பகையே! இன்பந் தருந்தமிழில்... இசையமுது தெள்ளு தமிழில் இசைத்தேனைப் பிழிந்தெடுத்துத் தின்னும் தமிழ் மறவர் யாம் யாம் யாம் பகையே! துள்ளும் பகை முடித்துக் கூத்திடுவோம் தமிழர் கொள்கை நிறைவடைந்து போம் போம் போம் பகையே! இன்பந் தருந்தமிழில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/43&oldid=1443348" இலிருந்து மீள்விக்கப்பட்டது