பக்கம்:இசையமுது 1, 1984.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 இசையமுது மீன்வலைசேந் தும்கயிற்றை வேய்ந்த வளையம்போல் தேன் குழல்தான் நான் பிழிந்து தின்னத் தாரேனா? விழுந்துபடும் செங்கதிரை வேல் துளைத்ததைப் போல் உழுந்துவடை நெய்யொழுக உண்ணென்று தாரேனா? தாழையின் முள்போன்ற தகு? ரகச்சம்பா ஆழ உரலில் இடித்த அவலைக் கொதிக்கும்நெய் தன்னில்தான் கொட்டிப் பொரித்துப் பதக்குக் கொருபதக்காய்ப் பாகும் பருப்புமிட்டே ஏலத்தைத் தூவி எதிர்வைக்க மாட்டேனா? ஞாலத் தொளியே நவிலுவதை இன்னுங்கேள்; செம்பொன்னை மேற்பூசித் தேனைச் சுளையாக்கிக் கொம்பில் பழுத்தநறுங் கொய்யாப் பழமும். செதில் அறுத்தால் கொப்பரையில் தேன் நிறைந்ததைப் [போல் எதிர்தோன்றும் மாம்பழமும், இன்பப் பலாப்பழமும். வேண்டுமென்றால் உன்னெதிரில் மேன்மேற் குவித்து விடும்! பாண்டியனார் நன்மரபின் பச்சைத் தமிழே! நெருங்க உறவுக்கு நீட்டாண்மைக் காரர் அறஞ்சிறந்த பல்கோடி ஆன தமிழருண்டே! எட்டும் உறவோர்கள் எண்ணறுதி ராவிடர்கள் "வெட்டிவா' வென் றுரைத்தால் கட்டிவரும் வீரர்அவர்! என்ன குறைச்சல் எதனால் மனத்தாங்கல்? முன்னைத் தமிழர் முடிபுனைந்து ஞாலத்தை ஓர்குடைக் கீழ்ஆண்ட உவகை உனக்குண்டு! சேரனார் சோழனார் சேர்த்தபுகழ் உன்புகழே! ஓவியக் கரைகண்டார் உண்மைநெறி தாம்வகுத்தார் காவிய சிற்பத்தில் கவிதையினில் கைகாரர் உன்னினத்தார் என்றால் உனக்கின்னும் வேண்டுவதென்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/57&oldid=1443368" இலிருந்து மீள்விக்கப்பட்டது