பக்கம்:இசையமுது 1, 1984.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் பகுதி பொன்னில் துலங்குகின்ற புத்தொளியே கண்ணுறங்கு! கற்சுவரை மோதுகின்ற கட்டித்தயிரா. நற் பொற்குடத்தில் வெண்ணெய் தரும் புத்துருக்கு நெய்யா, நல் ஆனைப் பசுக்கள் அழகான வெண்ணிலவைப் போல் நிறைத்த பாலைப் புனியங்கொட்டை தான் 57 [மிதக்கும் இன்பநறும் பாலா, என்ன இல்லை? கண்ணுறங்காய். அன்பில் விளைந்த என் ஆருயிரே கண்ணுறங்கு! காவிரியின் பாதாளக் காலின் சிலம்பொலியும். பூவிரியப் பாடும் புதிய திருப்பாட்டும். கேட்ட உழவர் கிடுகிடென நல்விழாக் கூட்டி மகிழ்ச்சி குதிகொள்ளத் தோளில் அலுப்பை அகற்றி அழகுவாள் வில்போல் கலப்பை எடுத்து கனஎருதை முன்னடத்திப் பஞ்சம் தலைகாட்டப் பாமரப் படைமன்னர், நெஞ்சம் அயராமல் நிலத்தை உழுதிடுவார். கொத்துநெல் முற்றித் தலைசாய்ந்த கோலத்தை மாற்றியடித்து மறுகோலம் செய்த நெல்லைத் தூற்றிக் குவித்துத் துறைதோறும் பொன்மலைகள் கோலம் புரியும் குளிர்நாடும் உன்னதுவே! ஞாலம்புகழும் நகைமுகத்தோய் கண்ணுறங்கு! செம்புழுக்கல் பாலோடு பொங்கச் செழுந்தமிழா கொம்புத்தேன் செய்து குளிர்முகக் கனிச்சுளையோ உள்ளூற அள்ளி முழங்கையால் நெய்யொழுக உள்ளநாள் உன்னும் உயர்நாடும் உன்னதுவே! கோட்டுப்பூ, நல்ல கொடிப்பூ நிலநீர்ப்பூ தாட்டத்து வண்டெல்லாம் நல்லஇசை பாய்ச்சக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/58&oldid=1443369" இலிருந்து மீள்விக்கப்பட்டது