இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
2 இசையமுது
- நல்லிதழ்த் தாமரைத் தேனுக்கு. வண்டுகள் நாடுதல் பாரும்" என்றாள்- அவன், ** செல்வரின் வீடு திறந்ததடீ பசி தீரும் வரைக்கும்" என்றான் ! பின்னும்
போய்க் கொண்டிருந்தார்கள். • செவ்வலரிக் கொரு தீமையுண்டா? கண் சிவந்தது பாரும்" என்றாள் - அவன். "அவ்விடம் முல்லை சிரிப்பதும், தன் மொச்சி ஆடலும் நோக்கி" என்றான்! பின்னும் போய்க் கொண்டிருந்தார்கள். "வாழுதல் எண்ணிஇவ் வையம் வெறுத்தவர் வந்தனர் பாரும்" என்றாள்-அவன். கீழுலகத் துள இன்ப மெலாம் இவர் கேட்டதும் இல்லை என்றான் ! பின்னும் போய்க் கொண்டிருந்தார்கள்.