இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
14 கண்டதும் காதல் இசையமுது எடுப்பு களிப்பில் ஆடும் கான மயிலோ காதாரும் பண் பாடும் குயிலோ? (களிப் ) உடனெடுப்பு துளிக்கும் மது மலரின் தேகம் சுகம் தரும் இவள் அளிக்கும் போகம்! அடி யளிக்குமேனி கண்டு மனந்தத் தளிக்குதுடல் (களிப்) கொப்பளிக்குதே! ஒளிக்குதே இம் முகவிலாசம் உளத்தில் மோகம் [தெளிக்குதே! வளர்க்கா தெழில் வளர்ந்த ரூபம் வையம் விளங்க ஏற்றும் தீபம் ! (களிப்) கலைத்துக் கலைத்து வரைந்த சித்ரமோ கவினுறும் விழி வேலோ ! ஒலிக்கெலாம் உயிர் தரும் இவள் மொழி இனிப்புச் சேர்த்திட்ட பாலோ! தலைக்கேறுதே கொண்ட மோகம் தகிக்குதே இதென்ன வேகம்! (களிப்)