இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
இரண்டாம் பகுதி ஏந்திழை 15 எடுப்பு இன்பம் இன்பம் அடடா- அவ் வேந்திழையைக் காணுந்தோறும் உடனேடுப்பு அன்னம் நடக்கும் நடையும் - அருகே அன்னாள் அழகிய நடையும் அடி வஞ்சிக் கொடியும் அசையும்- அருகே மங்கை சிற்றிடை அசையும் நெஞ்சந் தன்னில் அதுதான்- காதல் நெருப்பை இட்டுப் பிசையும் (இ) கோவைக் கனியும் சிவக்கும்—அருகே கோதை இதழும் சிவக்கும் யாவும் அவளுக் கீவேன்- எனநான் எண்ணிடும் எண்ணம் உவக்கும் (இ) பச்சைக் கிளியும் கொஞ்சும் அருகே பாவையின் உதடும் கொஞ்சும் மெச்சும் போதே அடடா- மங்கை மீதினில் மையல் மிஞ்சும் (இ)