இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இரண்டாம் பகுதி சுருத்துரைப் பாட்டு. தலைவி கூற்று 19- பொருள்வயின் பிரிந்த இடத்துத் தலைவி ஆற்றாமை கண்டு தோழி சொன்னது நினையாரோ தோழி? தினை யேனும் எனை நினையாரோ தோழி? நினைவா ராயின் எனை யாள வருவார்! நிணைக்கிலார் / இனியேனும்என் நெஞ்சம் களிக்க நினையாரோ தோழி ! தீவேடன் அன்பின் இரும்புமுனை தீட்டும் ஒலிபோல் செங்காற் பல்லி துணையினை அழைப்பது கேட்டும் ஆய அக் கள்ளிக்காட்டு வழிச்செல்பவர் மீட்டும். அணுகாரோ அணுகாவிடில் அதுவென் நெஞ்சை வாட்டும் நினையாரோ தோழி! (குறூர் - 16. பாலை பாடிய பெருங் கடுங்கோ பாடற் கருத்து)