இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இரண்டாம் பகுதி அழுந்துதல் இல்லை உலகுள்ள வரைக்கும் அன்புத் தமிழர்கள் வாழ்வு! மணிமுடி மறவர்கள் முழுதுணர் மேயிலார் மாபெருங் கவிஞர்கள் கூட்டம். அணிமுடி காதல் மகளிர்கள் கூட்டம் ஆவது தமிழர்கள் ஈட்டம்! பணிகுதல் இல்லை அஞ்சுதல் இல்லை பாய்ந்திடும் ஒற்றுமை யாலே ! தணியாக் காதல் நிறைவா மின்பம். தமிழர்க் கிப்புவி மேலே 29