இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இரண்டாம் பகுதி புறாவே. தன்போல் மற்றொன்றைத் தான்உண் டாக்குதல் மன்னுயிர்க் கெல்லாம் இயல்போ புறாவே ? இன்பம், குழந்தையைப் பெறுவது தானோ? வளர்ப்பதும் இன்பமோ மாடப் புறாவே? உயிரில் கலந்த உணவையும் கக்கியே ஊட்டிடு கின்றதும் இன்பமோ புறாவே ? மயல்தீர் வாழ்வில் இன்பத்தின் அடிப்படை மக்களைப் பெறுவதோ மாடப் புறாவே? மக்களின் மலருடல் தொடுவதும் இன்பமோ? ல் மழலை மொழியும், குழலோ புறாவே? மக்களில் லாதார் வாழ்க்கை வீழலோ மனநலம் வாய்ந்த மாடப் புறாவே? 35