இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இரண்டாம் பகுதி வேங்கைக் குகையில் நீள் வையம் எதிர்த் திடினும் -அஞ்சுதல் இல்லாத் தோள் வாய்ந்த மூவேந்தர்-சீர் ஆட்சி. 37 நாள் என்ற கடல் வெள்ளம் தான் கொண்டு போனதே கோள் வாய்ந்த பெருந்தீயர் வரவால் இருளானதே ! யாவரும் ஒன்றே என வாழ்ந்தோமே நாங்கள் இனம் சாதி மதவெறி அலங் கோலம், மேவி வீழ்ச்சி நிலை அடையவும் ஆனதே வேங்கைக் குகைக்குள்நரி வாழ்ந்திடவும் ஆனதே.