முன்னுரை
இந்த இசையமுது இரண்டாந் தொகுதியில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் இதற்குமுன் தனித்தனியே வெளிவந்தவைகளே ; இருபதாண்டுகட்கு முன் எழுதப் பட்டவைகளையும் தேடி இதிற் சேர்த்திருக்கிறார் அலுவ லகத்தார். இது படிப்பவர்கட்கே தெரியும்; வட சொல் கலந்திருப்பதால்
வேறு நூற்களை வெளியிடுவோர், அவற்றில் ஒரு நூற்படியுடன் என் நூற்படியையும் சேர்த்துக் கட்ட டம் கட்டி விலைப்படுத்துகிறார்கள். இப்படிச் செய்ய நான் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கு மட்டும் உரிமை தந்ததுண்டு. இதன் வாயிலாக மற்ற வெளி யிடுவோரை, "அப்படிச் செய்யவேண்டாம்" என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.
என் நூற்களில் சிலவற்றை, வெளியிடுவோர் பலருக்கு உரிமை கொடுத்திருக்கிறேன். ஆயினும் அவ்வுரிமை, அவர்கள் சுவடியாக மட்டும் அச்சிட்டு வெளியிடுவதற்கேயாகும். அவற்றிலுள்ள ஒரு பகுதி யையோ முழுதையுமோ அரங்கு செய்தல்--நாடகம் சினிமா ஏடுகளில் வெளியிடுதல் கூடாது. உரிமையை என்னிடமே வைத்துக்கொண்டிருக்கிறேன். நாங்கள் முழு உரிமை பெற்றவர்கள் என்று கூறிக் கொண்டு என் நூலை வெளியிட எவருக்கும் உரிமை இல்லை.
புதுவை
18-12-52.
பாரதிதாசன்