இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
38 எதற்கும் மேல் இசையமுது தமிழ் நாடுதான் மேலான நாடு தமிழர்க் கெல்லாம் மற்றவை காடு (த) கமழ் தென்றலே நடமாடு நாடு காவிரி நீள்வைகை பாயும் நாடு (த) கன்னல் மா பலாவும் வாழை கமுகு செந்நெல் யாவுமே மலிகின்ற நாடு (த) பொன்னின் வார்ப்படம் போல் மாதரோடு போர்புரி மாவீரர் வாழும் நாடு. (த)