இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
40 எது தம்பி வேண்டும். கொல்லையிலே ஒரு சிட்டு நல்ல கூட்டினிலே ஒரு கிள்ளை சொல்லும் இவற்றினில் யாது ?-நீ துன்பம் இல்லாதது கூறு! முல்லையிலே ஒரு வண்டு-பண மூட்டையின் மேலொரு செல்வன். இல்லை என்னாத நல்வாழ்வை-நீ இந்த இரண்டில் விளக்கு, இசையமுது கோயிலில் பார்ப்பனர் வேதம்-குப்பை கூட்டிடுவாள் தமிழ்ப்பேச்சு. தூயது யாது சொல் தம்பி-அன்றித் தொல்லை விளைப்பது யாது? வாயிலிலே கொஞ்சும் ஏழை-சிலை வார்க்கும் திருப்பணி யாளன் ஈய நினைத்திடும் காசை- நீ யாருக்கு நல்குவை தம்பி ! ஊருக்குழைத்திடக் கேட்டார்-உனை யோகம் புரிந்திடச் சொன்னார் யாருக் குடன் பட எண்ணம்-நீ இந்த இரண்டினில் தம்பி? கார் விதைக்கும் தொழிலாளி-நேர் கைலை வேண்டிடும் சைவன்