பக்கம்:இசையமுது 2, 1952.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 இசையமுது Y பிள்ளைக்கு நீதி X சோம்பிக் கிடப்பது தீமை-நல்ல தொண்டுசெயாது கிடப்பவன் ஆமை / தேம்பி அழும் பிள்ளைபோல-பிறர் தீமையை அஞ்சி நடப்பவன் ஊமை! புதுமையிலே விரைந்தோடு- ஒன்று போனவழிச் செல்லும் மந்தையில் ஆடு ! எதிலும் நிசத்தினைத் தேடு-பொய் எவர்சொன்ன போதிலும் நீ தள்ளிப்போடு. தேகத்திலே வலி வேற்று-உன் சித்தத்திலே வரும் அச்சத்தை மாற்று ! ஊக்கத்திலே செயல் ஆற்று 1-தினம் உன்னருமைத் தமிழ் அன்னையைப் போற்று. பசிவந்த போதுண வுண்ணு-நீ பாடிடும் பாட்டினி லே சுவைநண்ணு! வசித்திடும் நாட்டினை எண்ணு-மிக வறியவர்க்கம் உபகாரங்கள் பண்ணு. பொய்யுரைப் போன் பயங்காளி- பிறர் பூமி சுரண்டிடு வோன் பெருச்சாளி வையக மக்கள் எல்லோரும் - நலம் வாய்ந்திட எண்ணிடுவோன் அறிவாளி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/59&oldid=1500253" இலிருந்து மீள்விக்கப்பட்டது