பக்கம்:இசையமுது 2, 1952.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நல்லினஞ் சேர்தல் சேரிடம் அறிந்துசேர் எந்நாளும் தீயரை அணுகிடிற் பழி முளும் ! சீரிய ஒழுக்கம் சிறந்தநூற் பழக்கம் மைந்தா நேயம் ஆரிடம் உள்ளதோ அன்னவரிடமே ஆகுதல் அல்லவோடா உன் கடமை ! மண்ணின் குணம் அங்குள்ள நீருக்குண்டு மாலையில் மலர்மணம் நாருக்குண்டு. திண்ணம் சேர்ந்த பன்றியொடும் கன்றும் கெடும்! இசையமுது மைந்தா கண்செய்த குற்றம் தீயர் தமைக்கண்டால் - மைந்தா கை செய்த நலம் நல்லார் அடி தீண்டல் சடுதியிலே தீயர் சகவாசம். பிராண சங்கடம் உணர் இந்த உபதேசம். தடையிதில் தாய் எனக் ஏது கோது? சுடுநெருப் பானவரின் குணம் தெரிந்து - மைந்தா. சுப்புரத்தினம் சொல்லும் அமுதருந்து! (சேரிடம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/63&oldid=1500258" இலிருந்து மீள்விக்கப்பட்டது