இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இரண்டாம் பகுதி தோட்டம் ஊருக்குப் போய்வரும் நாளையிலே மிக உரத்திடும் வெய்யில் வேளையிலே ஆருக்கும் தாங்காத பசிகொண்டு- நான் அங்கொரு தோட்டத்தில் புகக் கண்டு பழங் கொடுத்தது மாமரம் என் பசி தொலைத்தது மாமரம் நிழல் கொடுத்தது மாமரம் - துயர் நீங்க வைத்தது மாமரம் தாகம் தணித்தது தென்னைமரம் மணம் தந்து மலர்ந்தது புன்னைமரம் உற் சாகம் பிறந்தது வீடுவந்தேன்-மரம் உதவி செய்ததை நான் நினைந்தேன். 53