இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இரண்டாம் பகுதி தெலுங்குகாரன் நாட்டாட்சி செய்யும் நிலை வந்துவிட்டால் தெலுங்கருக்கே நல மெல்லாம் செய்திடுவான் என்கின்றாயா? மலையாளி நாடாண்டால் மலையாளத் தார்களுக்கே நலம் புரிவான் என்கின்றாயா? நல்ல கரடி உன் கரடி இடியப்பக் காரா 1 இரட்டி செய்த ஆட்சியிலே இரட்டி யார்க்கே நாட்டை எல்லாம் புரட்டி விட்டான் என்று நீயே புளுகியதும் உண்டல்லவா? விருப்பமுடன் வேளா என். வேளாளர் தங்களையே உருப்படச்செய் தான் என நீ உளருவதும் உண்டல்லவா? வரிந்து கட்டி வன்னியனும் வன்னியர்க்கே நன்மையெலாம் புரிந்து விட்டான் என்று மனம் புழுங்கியதும் மெய்தானே? துருக்கன் ஒரு தென்னாட்டான் துருக்கருக்கே நலம்புரிவான் சிரிக்கும்படி இப்படி நீ செப்புவதும் உண்டல்லவா? இடியப்பக் காரா! 57