இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
58 காவலந்தீ வொன் றதிலே நவிலும் இரண் டுலகம் உண்டு மூவேந்தர் கொடிபறக்க முத்தமிழின் நலம் சிறக்கத் தேவைளலாம் கொண்ட திரா விடஉலகம் ஒன்றாகும் ! ஆஓட்டி ஆத்தின்னும் ஆரியநா டொன்றாகும் ! நடுவிலொரு விந்தியமாம்! நல்லதிரா விட நாடு, கடல் மூன்றும் புடைசூழும் கவினுறு தென் பாங்கினிலே! வட நாட்டில் திரவிடர்கள் வாழுகின்றார் அங்கவர்கள் வடவர்கள்தாம் என்பதான மனநிலைகொண் டவராவார் வடுவிலாத் திராவிடத்தில் வடவர்களைச் சேர்ந்தசில மடயர்களும் உண்டப்பா வயிற்றெரிச்சல் கூறிடுவேன் இடவிரும்பும் திரவிடத்தில் இரந்துண்டு வாழுமந்தக் கடையர்க்கோ திரவிடரைக் கவிழ்ப்பதுதான் பெரு நோக்கம் இடியப்பக் காரா ! இசையமுது