பக்கம்:இடைத்தரக் கட்டுரை இலக்கணம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சொற்றொடர் அமைப்பு (i) சொன்முறை (order of Words):- பின்னும் 67 ஒரு சொற்றொடரில் எழுவாய் முன்னும் பயனிலை செயப்படுபொருள் இடையிலு மிருத்தலே, இயல் பான முறையாகும். எ - டு : சம்பந்தர் சமணரை வென்றார். எழுவா யில்லாது ஒரு சொற்றொடரும் எழுதுதல் கூடாது. நேர்க்கூற்றில் (Direct Speech) மட்டும் தன்மை முன்னிலை எழுவாய்கள் தொக்கு நிற்கலாம். ஏற்றத்தாழ்வான பல பொருள்களைக் கூறும்போது, ஏறுவரிசை (Ascending order of magnitude) யிலாவது, இறங்குவரிசை (Descending order of magnitude) யிலாவது கூறவேண்டும். நிரனிறை. இரு அல்லது பல பொருள்களை ஒரு முறையில் நிறுத்தியபின், அவற்றுக் குரிய செய்திகளையும் அம் முறையிலேயே கூறவேண்டும். எ-டு: நாய்க்கரும் கவுண்டரும் முறையே ஈரோட்டிற்கும் சேலத்திற்கும் சென்றனர். (ii) முறைமாற்று (Hyperbaton Order):- Or Inverted சில சொற்றொடர்களில் வற்புறுத்தம் (Emphasis) காரணமாய்ச் வரும். எ-டு: சொற்றொடருறுப்புக்கள் முறை கண்டேன் சீதையை. உண்டே மறுமை. (iii) சொல்லிடையீடு (Inter-verbal Space ):- மாறி சொற்கட்கிடையில் போதுமான இடம் விடல் வேண் டும். இல்லாவிடின், உரைஞன் அல்லது எழுத்தாளன் கருதிய தொடர்கள் வேறு தொடர்களாக மாறிவிடலாம்.