பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—2—

தனக்கு இருக்கிற அனைத்து விளம்பர அதிகார விரிவாக்க வாய்ப்புகளையும் கருவிகளையும் பயன்படுத்திக் கொண்டு, தன்னை எல்லாரும் நம்பிப் பின்பற்றத் தக்க 'புனிதனாக'வும் வல்லவனாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும்” — என்பது சாணக்கியம். இதைத்தான் அன்றைய சாணக்கியன் முதல் இக்கால இந்திரா, இராசீவ் வரை, சூழ்ச்சியாகக் கடைப் பிடித்துத் தங்களை உலகத்திற்கே நல்லவர்களாகவும் மக்கள் தலைவர்களாகவும் வெளிச்சம் போட்டுக் காட்டிப் பச்சைப் பார்ப்பனீயத்தை இந்தியாவிலும் பிற உலக நாடுகளிலும் பரவலாக வலுப்படுத்திக்கொண்டு சென்றார்கள். --

“வேதமதத்தை(இக்கால் இந்து மதத்தை)க் கொண்டு, மக்களை அனைத்து வகையிலும் கவர்ந்து வயப்படுத்தி, மதி மயங்கச் செய்து, தன்னை நடமாடும் தெய்வ நிலைக்குப் பார்ப்பான் உயர்த்திக் கொள்ள வேண்டும்" — என்பது சங்கராச்சாரியம்! இதைப் பயன்படுத்திக் கொண்டுதான் ஆதிசங்கராச்சாரியன் முதல், காஞ்சியிலுள்ள கழிசடைப் பிறங்கடைப் பார்ப்பனர்கள் வரை, தூய அறநெறி சான்ற சமணத்தையும் பௌத்தத்தையும் வேரறுத்துத் தங்கள் கைக்கருவிகளான நான்கு வேத, ஆறு சாத்திர, பதினெண் புராணங்களையும் இராமாயண, பாரத இதிகாசங்களையும் மக்கள் மண்டையில் ஆணி அறைந்தது போல் ஆழ அடித்து, அவர்களை மூளை வெளுப்புச் செய்து, அறிவியல் வளர்ச்சி பெற்ற நிலையிலும், இந்து மதம் என்னும் ஆரிய வேத மதத்தைப் பிற அறிவுக் கொள்கைகளால் அசைக்க முடியாமல் வேரூன்றச் செய்து, அறிவியலையும் பொருளற்ற புரையியலாக்கி வருகிறார்கள்.

இம் மூவகைப் பார்ப்பனீயக் கோட்பாடுகளைப் பயன்படுத்தித்தான், பார்ப்பனீயத்தை இந்தியாவில் மக்களின் நாடி நரம்புகளில் எல்லாம் பாய்ச்சி, எல்லா வகையிலும் அரசியல், பொருளியல், குமுகவியல் குற்றவாளிகளான இந்திராவையும், இராசீவையும் உலகத் தலைவர்களாக்கி,