பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—6—


இராசீவ் ஓர் ஊழல் பேர்வழி!

இராசீவ் தம் தாயார் இந்திராவைப் போலவே உலகறிந்த அரசியல், பொருளியல் ஊழல் மன்னராகவே வாழ்ந்திருப்பதை உலகமே அறியும். மேற்கு செருமனியிடமிருந்து போர்க்கருவிகள் வாங்கிய வகையில் பேர்பாக்சு (Fare Fax) முகவாண்மை நிறுவனத்துடனும், சுவீடன் நாட்டுத் தகரிகள் (டாங்கிகள்) வாங்கிய பேரத்தில் அங்குள்ள போபார்சு நிறுவனத்துடனும், சப்பான் நாட்டிலிருந்து நீர் மூழ்கிக் கப்பல் வாங்கிய பேரத்திலும் இராசீவ் அடித்த கோடிக் கணக்கான உருபாக் கொள்ளைகள் மிகப்பெரும் பெயர் பெற்றவையல்லவா?

இராசீவின் அன்னை இந்திரா செய்த முந்திரா ஊழலை, அவர் கணவரும் இராசீவின் தந்தையும் ஆகிய பெரோசு காந்தியே அம்பலப்படுத்தினார். அவரினும் மேலாக, 'தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்' என்னும் பழமொழியை, இராசீவ் இறக்குமதி உரிமம் வழங்குவதில் செய்த ஊழல், மாருதி சிற்றுந்து ஊழல் — முதலியவை மெய்ப்பித்துக் காட்டின. இந்திரா செய்த நகர் வாலா கொலை போன்ற பன்னூற்றுக் கணக்கான கொலைகளுக்கு மேலும், இராசீவ், அவர் அன்னை கொலை செய்யப்பட்ட 1984 அக். 31-இலும், அதற்குப் பின்னும் திட்டமிட்டுப் பல நூறு கொலைகளைச் செய்ய ஆட்களை ஏவிவிட்டார். அக்கால கட்டத்தில் தில்லியில் மட்டும் ஏறத்தாழ மூவாயிரம் பேர்களுக்கு மேல் கொலை செய்யப்பட்டனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வண்டிகள் கொளுத்தப்பட்டன. 2174 வீடுகள், தொழிற்சாலைகள், கடைகளுக்குத் தீயிடப் பெற்றது. ஏறத்தாழ 300 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகள் அழிக்கப்பட்டன. இவையெல்லாம் இந்திராவின் கொலைக்குப் பின் மக்கள் எழுச்சிக்கிடையில் இயல்பாக நேர்ந்தவையல்ல; திட்டமிட்டு நிகழ்த்தப் பெற்றவை. இவற்றை இராசீவின்