பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—7—

'அரசியல் திருவிளையாடல்கள்' என்றே சுருக்கமாகவும் விளக்கமாகவும் கூறிவிடலாம்.

பார்ப்பனரின் பொய்ப் புகழ்ச்சிகள்!

இத்தனை அழிம்புகளுக்கும் இன்னும் எத்தனையெத்தனையோ தொடர் ஊழல்களுக்கும் காரணமான இராசீவைத்தான், அவர் மறைவு நாளில், உலகத் தலைவர், பாரதத்தை மேம்படுத்த வந்த மாபெரும் ஆற்றல் வாய்ந்தவர், இந்தியாவின் அருமை பெருமைகளை உலகளவில் உயர்த்திய பிறவித் தலைவர் என்றெல்லாம் அளவுக்கு மீறிப் புகழ்ந்து பாராட்டித் தங்கள் பதவிப் பேராசைகளுக்கு உயர்ச்சி காட்டிக் கொண்டனர். 'இராசீவ் இல்லையானால், ஏதோ இந்தியாவே அழிந்து விடுவது போல்' ஒப்பாரி முழக்கினர்.

ஒரு நாட்டின் தலைமையமைச்சராக யார் வந்து அமர்ந்தாலும், அவர் பதவியில் உள்ளபோது மறைந்தால், பிற உலக நாடுகளின் தலைவர்களில் பெரும்பாலாரும் வந்து இரக்கம் தெரிவிக்கவும், அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு இரங்கல் உரை ஆற்றவுமே செய்வர். பொதுவாக நடந்த இந்நடைமுறையை, ஏதோ இராசீவுக்காக நடந்த பெருமைக்குரிய சிறப்பு நடைமுறையாகவே வண்ணித்து வானளாவ இராசீவைப் புகழ்ந்து தள்ளினர், இங்குள்ள பார்ப்பனர்களும் அவர்களின் அடிவருடிகளும்!

இந்த வகையில் இராசீவின் மறைவை, அவர் அன்னை இந்திராவை விடவும், அவர் பாட்டனார் நேருவை விடவும், இன்னும் உலக நாடுகள் அனைத்திலும் உள்ள தலைவர்களுக் கெல்லாம் மேம்பட்ட தலைவராகவும் காட்டியதும், இந்தியாவுக்கு இவர், பிறர் யாருமே ஆற்றவொண்ணாத பெருந்தொண்டும், ஈகமும் செய்தது போல மிகைப்படுத்தி விளம்பரம் செய்ததும், அண்மையில் நடைபெறவிருந்த தேர்தல் ஊதியத்திற்காகவும், அவர் மேல் படர்ந்திருந்த