பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 26 —

இந்து மதத் தலைவர்களுள் ஒரு பெரும் பார்ப்பனீய வெறியரைத் தேர்ந்தெடுத்து, அனைத்திந்தியத் தலைமைக்கு அத்துவானி போன்றவர்களை முன்னுக்குக் கொண்டுவரப் பார்ப்பனர்கள் மிகு துடிப்புடன் இயங்குகின்றனர்.

இவற்றுக்கிடையில் தமிழகத்தின் நிலை:

இவ்வதிர்வு நிலைகளுக்கிடையில் எந்தமிழ் இனம் அடுத்த தலைமுறைக்கு ஏற்ற ஒரு பெருந்தலைமைக்கு ஆள் பார்த்து ஏங்கிக் கிடக்கின்றது. சென்ற தலைமுறையில், தமிழர்களின் நம்பிக்கை விண்மீன்களாகக் காட்சியளித்த தமிழினத் தலைவராம்(!) கலைஞர், தம் தோள்கள் சாம்பியும், மனம் கூம்பியும், அடுத்த அடி எங்கு வைப்பது எதில் வைப்பது என்று அல்லற்பட்டு ஆற்றாமல் கிடந்து வருகிறார்.

திராவிடக் கூட்டத்தைக் கட்டமைத்த தந்தை பெரியார் பிறங்கடையரான திராவிடர் கழகத் தளபதி(!) கி. வீர மணியோ, தம்மிடம் குவிந்துள்ள காசுகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டித் திருட்டு விழிவிழித்துப் பார்ப்பன முதல்வர் செயலலிதாவின் ஆயிரம் இயங்கிகள் புடை சூழ வரும் வழிநடைச் செலவுகளுக்கு வெற்றிப் பதாகைகளும், பட்டுக் கம்பளமும் விரித்துப் புகழ்ப் பராவுதல் செய்து வருகிறார்.

இனி, எஞ்சியுள்ள தமிழர் இயக்கங்களின் தலைவர்கள் ஒரு சிலரும், தனித்தனியான முழக்கங்களை அவ்வப்பொழுது எழுப்புவதும், பின்னர் அடுத்தடுத்து வரும் அரசியல் வாய்ப்புகளுக்கு நாள் பார்த்துக் கிடப்பதுமான அவலங்களிலேயே மூழ்கி, எஞ்சியுள்ள காலங்களை மெல்லமெல்லக் கடந்து வருகின்றனர். அவர்களுள் பாட்டாளி மக்கள் கட்சி அமைப்பாளர் திரு. இராமதாசு அவர்களும், திரு. பழ. நெடுமாறன் அவர்களும், திரு. நகைமுகன் அவர்களும் நம் நம்பிக்கைக்கு உரியவர்களாகப் படுகின்றனர். இனி, தம்பி பிரபாகரனோ ஒரு தனிப் போராளியாகவே இறுதி