பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 30 —

தங்கள் மறைவான நடவடிக்கைகள் அம்பலமாகிப் போகுமே என்பதால், மக்கள் அறிவும், உணர்வும் பெறுவதை அவர்கள் விரும்புவதில்லை .

இந்திராவும் இராசீவும் மறைந்து போனாலும் இந்திய, தமிழக அரசியல் களங்களில் இன்னும் அவர்களின் ஏமாற்று எத்துகள், அரட்டல் புரட்டல்கள், அரைசல் புரைசல்கள் யாவும் மறைந்து விடவில்லை. இப்பொழுதுள்ள அரசியல்காரர்கள் சில நிலைகளில் அவர்களைப் போலவும், பல நிலைகளில் அவர்களைவிடவும் தில்லு முல்லுகளையும், தமிழின அழிப்புகளையும் செய்து கொண்டுதான் வருகின்றனர்.

செயலலிதாவின் ஆட்சிக் கோட்பாடு:

தமிழ்நாட்டு ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றிய செயலலிதா தமிழினத்தின் மேல் தொடுத்துள்ள வஞ்சகத் தனமான அழிவுப் போரின் உத்திகள் கொஞ்சநஞ்சமல்ல. தம் அரசியல் எதிரிகளாக அவர் கருதும் கலைஞரையும், அவர் கட்சியினரையும் பழிவாங்குவதாகக் கலைஞர் உட்பட அனைவரும் கருதுகின்றனர்; குற்றஞ் சாட்டுகின்றனர். ஆனால், செயலலிதா தம் ஆட்சியதிகார வன்மையால், தமிழினத்தையே அழித்தொழிக்க உறுதி பூண்டுள்ளார் என்பதே முழு உண்மையாகும். இதை விளங்கிக் கொள்ளாமல், அவரின் அடிவருடிக் கொண்டிருக்கும் தமிழின வீடணர்களான வீரப்ப, நெடுஞ்செழியப் பொறுக்கித் தின்னிக் கும்பல் அவருடன் இணைந்து தம் இனநலத்தையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டுள்ளது.

கடந்த கால அரசியல் கண்ணோட்டங்களையும், இக்கால அரசியல் நடவடிக்கைகளையும் சரியாக மதிப்பிட்டுச் சொல்வதானால், பெரியார் காலத்தைவிட, அண்ணா காலத்தில் பார்ப்பனர்கள் விழிப்படைந்திருந்தனர். அண்ணா காலத்தைவிட, கலைஞர் காலத்திலும், கலைஞர்