பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20



போட்டி நடைபெறுகிறது. ஓமந்தூரார் ஜெயம் பெறுகிறார். ஆந்திரநாட்டுப் பிராமணர் பிரகாசம் தோல்வி அடைகிறார். இந்த முடிவு தெரிந்ததும் மக்கள், பிராமணர் ஒழிக என்று கூவுகிறார்கள் என்றால், சூட்சமம் தெரியவில்லையா ! நாலும் நாலும் எட்டு, எட்டுடன் இரண்டு சேர்த்தால் பத்து என்பது போல் மிகமிகச் சாமான்யமானவர்களுக்கும், புரிந்து விடுகிறதே சூட்சமம்,—மிகமிகச் சாமர்த்தியமாக மறைத்து வைக்கப்பட்ட சூட்சமம்.

  • உள்ளே நடைபெற்ற போட்டிக்கு பிராமணர் காரணம் என்று, வெளியே கூடி இருந்த மக்கள் எண்ணுகிறார்கள். ஓமந்தூரார் ஜெயித்ததும், பிராமணர்களின் திட்டம் தோற்று விட்டது என்று தீர்மானிக்கிறார்கள். போட்டியில் கலந்து கொள்ளும் உரிமை கிடைக்காததால் தங்கள் உள்ளத்தில் உள்ளதை மற்றவருக்கு அறிவிக்க, என்ன வழி என்று யோசிக்கிறார்கள். ஓர் யோசனை உதிக்கிறது, பிராமணர் ஒழிக! என்று கூச்சலிடுகிறார்கள். இதுதானே விஷயம்!!

இனி இதனால் வேதனை என்ன? வெற்றிதான் ஓமந்தூராருக்குக் கிடைத்துவிட்டதே, என்று கேட்கத் தோன்றும்.

  • கெட்ட நடவடிக்கை கொண்ட ஒருவரை நீக்கவோ திட்டம் ஒன்றைத் தாக்கவோ, 'போட்டி' நடைபெறவில்லை. பார்ப்பனர் அல்லாதார் பிரச்னை மீதே போட்டி நடைபெற்றது. அதுவும், பார்ப்பனர்—அல்லாதார் என்ற பிரச்னையைப் பிரசாரக்—கொள்கையாகக் கொள்ளாமலும், அந்தப் பிரச்னை காரணமாக வரைமுறை தவறி நடக்கிறார் என்று குற்றம் சாட்டப்படக் கூடிய நிலையிலே, இல்லாதவரும், மிக நல்லவரும், பழுத்த காங்கிரஸ் வாதியுமாகிய ஓமந்தூராருக்கே, அவர் பிராமணர் அல்லர்: அவருடைய ஆட்சியின் கீழ் பிராமணரின் ஆதிக்கத் துக்கு வழிவகை செய்யப்படும் என்று நம்பிக்கையோடு இருக்க இடமில்லை, என்ற அளவு சந்தேகம் ஏற்பட்ட உடனே, நல்ல வரானால் என்ன? காங்கிரஸ்காரரானால் என்ன? நம்மவர்க்கு அவர் இருப்பதால் இலாபம் இல்லை என்று தெரிந்த பிறகு, அவர் ஆட்சி செய்ய, ஏன் நாம் அனுமதிக்க வேண்டும்? இதோ