பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23



என்று கேட்கிறார் டாக்டர் சுப்பராயன். இப்படி எல்லாம் சதி செய்வதா நல்லவரை வீழ்த்த! அதிலும் காங்கிரஸ்காரர், காங்கிரஸ் கண்ணியரை கவிழ்ப்பதா, என்று மக்கள் கேட்பர்—ஆனால் குறை கூறுபவரோ, அமைச்சராக இருப்பவர்—போலீஸ் இலாகாவின் பொறுப்பைக் கொண்டுள்ளவர்.

"என் காதிலே அந்தச் சத்தம் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதுபோலிருந்தது" என்றார் டாக்டர். "ஓமந்தூராரை ஒரு நேர்மையான காரணமுமின்றி, அவருடைய சொந்தக் கட்சியினர் என்றே கூறிக்கொண்டு கவிழ்க்க வேலை செய்தார்களே, சில ஐயமார்கள், அதைக் கண்டபோது, எங்கள் கண்களிலே பழுக்கக் காய்ச்சிய இரும்புத்துண்டுகள் நுழைந்தது போலிருந்தது டாக்டரே ! நீர் இந்த வேதனையை அறியமாட்டீர்!" என்று மக்கள் கூறுவர்—மந்திரியாருக்கு மேலும் கோபத்தை மூட்டினால், அவருடைய அதிகாரம் தாக்கக் கிளம்பி வருமே, என்று மட்டுமே, நேரடியாகக் கூறாமலிருக்கிறார்கள். கூறாவிட்டாலும் டாக்டர் சுப்பராயன், ஏன் யோசிக்கக் கூடாது—யோசித்தால், மக்கள் என்ன கூறுவார்கள் என்பது புரியுமே—இவருடைய காது வேதனைப்பட்டதுதானா பிரமாதம்? மக்களின் மனம் அடைந்த வேதனையை விடவா இவருடைய வேதனை அதிகம்?

இமயமே சாய்ந்திட்டாலும்
             இம்மியும் நேர்மை நீங்கார்
அமைதியின் வடிவமானார்
             அன்பினால் ஆளவந்த
தமிழகக் காந்தி ராமசாமி
             நம் முதலமைச்சர்
கமற் தரும் புகழால் மீண்டும்
           கட்சியின் தலைவரானார்.

என்று, களிப்புக் கவிதை, தினசரியில் வெளிவந்தது.

கமழ்தரும் புகழ்! தமிழகக் காந்தியாம் ராமசாமிக்கு! ஆனால், அந்தப் புகழ் மணத்தை முடைநாற்றம் என்று கூறினர்