பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளி முளைக்க
8
ஆண்டுகள்!


மேடையில் பேசும் போது. எல்லோரும் சரியாகத்தான் பேசுகிறார்கள். ஆனால் தனியே சந்தித்துப் பேசுகையில் வகுப்பு வாதம் அவர்களைப் பிடித்துக் கொள்கிறது.

இந்த நிலைமை நீடிக்குமானால், இந்தியா முன்னேற முடியாது என்று முதலமைச்சர் ஓமந்தூரார், சென்னையில் கடந்த ஆண்டில் பேசியிருக்கிறார்.

வெளுத்ததெல்லாம் பால், கருத்ததெல்லாம் நீர் என்று நம்புபவர், ஓமந்தூரார் என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்டவர், 'ரஜதந்திரத்துக்காக' இதுபோல் பேசியிருக்க முடியாது. உண்மையாகவே, உள்ளத்திலிருந்தே இந்தக் கருத்து வெளிவந்திருக்க வேண்டும், வெறும் உதட்டசைவாக இருக்க முடியாது.

முதலமைச்சரின் இந்தப் பேச்சிலே, சலிப்பும் திகைப்பும் தோய்ந்திருக்கிறது. வகுப்பு வாதம் கூடாது என்பது முதலமைச்சரின் ஆவல். அந்த ஆவலின் காரணமாக அவர் வகுப்பு வாதம் எங்காவது தலைகாட்டுகிறதா என்று தேடிப்பார்க்கிறார்—யார் வகுப்புவாதம் பேசுகிறார்கள் என்று பார்க்கிறார். மேடை ஏறிப் பேசுபவர்களைக் கவனிக்கிறார். அவர்கள் யாரும், வகுப்பு வாதம் பேசுவதில்லை—ஆனால் தனிப்பட்ட முறையில் சந்திக்கும்போது, வகுப்புவாதம் அவர் எதிரே தெரிகிறது—எப்படி வந்தது? -அவர் திகைக்கிறார்

மேடை ஏறி, இந்தியர், பாரத புத்ரர் என்று பேசிய சிலர், முதலமைச்சர் முன்போ, அல்லது அவர் கவனிக்கிறார் என்பதறியாமல் வேறு யாரிடமோ, வகுப்புவாதியாகப் பேசியிருக்க வேண்டும்—அதனாலேதான் சலிப்பும் திகைப்பும் தோய்ந்த