பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


குரலில், முதலமைச்சர் கூறுகிறார்: மேடை ஏறிப்பேசும்போது சரியாகத்தான் பேசுகிறார்கள், தனிப்பட்ட முறையிலேயோ வகுப்புவாதம் பேசுகிறார்கள் என்று.

"வாங்க! சௌக்கியந்தானே! கதர் விற்பனை எப்படி? அரிஜன சங்கம் சரியாக வேலை செய்கிறதா?"—என்று முதலமைச்சர், ஏதோ ஓர் ஊரிலிருந்து வந்த, காங்கிரஸ் தோழரை விசாரிக்கிறார். அவர், "சௌக்கியந்தான் ! கதர் விற்பனை பரவாயில்லை!" என்று பதில் கூறிவிட்டு, "இது கிடக்கட்டும், ஏன் இப்படி ஒரே பார்ப்பன ராஜ்யமாகி வருகிறது—" என்று ஒருவெடிகுண்டு வீசுகிறார். முதலமைச்சர் அருவெறுப்படைந்து, "என்ன சொல்லுகிறீர்?" என்று கேட்க, குறை கூறியவர். "எங்கள் ஊரிலே கலெக்டர் பார்ப்பனர், டிப்டியாவது ஒரு தமிழனாக இருக்க வேண்டுமென்று நான் கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோலச் சொன்னேன்—சட்டையே செய்யாமல், டிப்டியும் ஒரு ஐயராகவே கொண்டு வந்து போட்டீர்கள். இது என்ன நியாயம்? இப்படி, பெரிய உத்தியோகஸ்தரெல்லாம், ஐயர்மார்களாக இருந்தால், நாங்கள் என்ன செய்வது?" என்று கூறுகிறார். முதலமைச்சர் திகைக்கிறார். "அடடா, எப்படிப் பட்ட தேசபக்தர் இவர். அலிசபுரம் சிறையிலே ஆறு வருஷம் இருந்தார்-அப்பழுக்கற்ற தியாகி. இப்படிப்பட்டவர், வகுப்பு வாதம் பேசுகிறாரே! என்னென்பது இந்தப்போக்கை? சென்ற மாதம், வகுப்புவாதம் ஒரு கொடிய நோய் என்று பேசினார், என்று பத்திரிகையில் படித்தேனே—என் எதிரே இப்போது வகுப்புவாதம் பேசுகிறாரே !" என்று எண்ணித் திகைக்கிறார்.

இவ்விதமான பல சம்பவங்களைக் கண்ட அனுபவத்தால் மட்டுமே. முதலமைச்சர் திகைத்துப் போய், அன்று சென்னையில் அவ்விதம் பேசியிருக்க வேண்டும் அவருடைய அனுபவம்,காங்கிரஸ் வட்டாரத்திலே பெயர் பெற்றதாகத் தானே இருக்கமுடியும்—தமது பக்கம் கூட அவர் தலை வைத்துப் படுத்தறியாதவராயிற்றே! அனுபவ பூர்வமாக ஓர் உண்மையை முதலமைச்சர் கண்டறிந்திருக்கிறார்: வகுப்பு வாதம், மேடையில் தெரிவதில்லை, தனிப்பட்ட சந்திப்புக்களின் போது, அதன் தாண்டவம்