பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


நாம் நாற்பது கோடி மக்கள்—ஆனால் நாலாயிரம் ஜாதிகளாகப் பிரிந்து, பிளவுபட்டுப் பாழானோம். உன் ஜாதி பெரிது, என் ஜாதி உயர்ந்தது, நீ. மட்டம், நீ தாழ்ந்த ஜாதி என்று நமக்குள் சண்டையிட்டு நாசமானோம். இதனைச் சாதகமாக்கிக்கொண்டான் அன்னியன். பாழான சாதி, பேதம் இந்த நாட்டிலே இருக்கும் வரையில் நாடுஉருப்படாது.

வீணான ஜாதி பேதத்தாலே தான், நம் நாடு வெள்ளைக்காரனிடம் இவ்வளவு காலம் அடிமைப்பட்டுக் கிடந்தது.

“தமிழர்கள், ஜாதி பேதத்தை அடியோடு விட்டொழிக்கவேண்டும்.

ஒன்றே குலம்—ஒருவனே தேவனும்.

ஜாதி இரண்டொழிய வேறில்லை.

நாமெல்லாம் இந்தியர்—தமிழர், நமக்குள் ஒற்றுமை வேண்டும்,வகுப்பு வாதம் கூடாது"

"அவாள்வாளுக்கு ஒரு ஜாதின்னு ஏற்பட்டிருக்கு.அது சரியோ, தப்போ, நம்மாலே ஆகிற காரியமல்ல அது. மேலும் இன்று நேற்று ஏற்பட்ட விஷயமல்ல, ஞானஸ்தாள், ஆதிநாட்களிலே, தீர்க்காலோசனைக்குப் பிறகு, சாஸ்திரோக்தமாகச் செய்த ஏற்பாடு. வர்ணாஸ்ரமம், சனாதனம் என்று அந்தக் காலத்திலே பெரியவர்கள் ஏற்பாடு செய்தான்னா, அது அர்த்தமற்றதாகவோ, கேவலமானதாகவோ இருக்க முடியாது. மகரிஷிகள் காலத்தில் ஏற்பட்ட முறை, இப்போது காலம் மாறிண்டு போறதாலே, ஒரு சமயம் அந்த ஏற்பாடு தப்புண்ணு கூடத் தோன்றலாம். தப்போ, சரியோ, அது நம்ம பூர்வீகச் சொத்து.அதை நம்புகிறவர் நம்பட்டும், வேண்டாமன்னு சொல்கிறவா சொல்லட்டும். ஆனா நான் என்ன சொல்றேன்னா,ஜாதி பேதத்தை பிரமாதப் படுத்திண்டு, சதா சர்வகாலமும் அதையேபேசிண்டு ஒரு ஜாதியாரைப் பழிச்சிண்டு, வகுப்பு வாதம் பேசிண்டு இருக்கிறது, கூடாதுன்னுதான் சொல்றேன்.