பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

அறிமுகம்


திராவிட சமுதாயத்தின் சீரழிவுக்குக் காரணம் பார்ப்பனியம். பிறவியினாலேயே உயர்வு தாழ்வு கூறும் கொடுமை இந்தியத் துணைக் கண்டத்துக்கே ஒரு தனிச்சிறப்பு. உலகில் வேறு எங்கும் காணமுடியாத பெரும் புதிர் பார்ப்பனியம் !

பார்ப்பனியம் ஓர் வாழ்க்கை முறை. அந்த ஏற்பாடு உருவாக்கப்பட்ட கால முதல், உருக்குலையாமல், இன்றும் இளமையோடு நாட்டு மக்களின் நெஞ்சிலும், நாவிலும், நடத்தையிலும் நர்த்தனமாடிக் கொண்டு இருக்கிறது.

பொருள் இயல் கோட்பாடுகளும், அவைகளையொட்டி எழுந்த சமுதாய அமைப்புகளும் முதலுக்கும் முடிவிற்கும் உட்பட்டு, வேறு சில புதுப்புது பிறவிகள் எடுத்து உலகில் உலாவுகின்றன. ஆனால் பார்ப்பனியம் மட்டும் காலந் தரும் கிழத்தன்மைக்கு பலியாகாமல் பாரில் பகட்டாக, குகை வாழ்வு முதல் கோட்டையில் குடியேறிய காலம் வரையில் எப்படி வாழ முடிகிறது ? இன்றும் பார்ப்பனியத்தின் தன்மை இதுதான்.

இது சிந்தனைக்குரியது. சிந்திக்க அறிவு -- ஆற்றல் இரண்டும் தேவை. அறிந்ததை அனைவருக்கும் அறிவிக்க அஞ்சா நெஞ்சம் தேவை.

பார்ப்பனியம் சாகாமல், பிறந்த மேனியோடு இன்றும் சரசமாடிக்கொண்டு இருப்பதற்கு, கடவுள், கர்மம், மோட்சம், நரகம் என்ற கற்பனைச் சொற்களே மூல அரண்களாகும். இந்த அரண்கள் இடித்து நொறுக்கப்பட்டு, மக்கள் மனத்தில் படிந்துள்ள மாசு துடைக்கப்பட்டு, சமத்துவ விதை தூவப்பட்டாலன்றி திராவிடரின் நலிந்த வாழ்வு நீங்குவது முடியாததாகும்.

அந்தக்காலத்தில் பார்ப்பனிய அக்கிரமத்தை அழித்தொழிக்க, உக்கிரமாகக் காலத்திற்கேற்ற முறைகளைக் கையாண்டு, களத்திலே கடும்போர் புரிந்தவர்கள் பழிக்கப்-