பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32



அதே துறைகளில் சிறுபான்மை வகுப்பினரான பார்ப்பனர், மிக மிக அதிகமான உயர்வு பெற்று விளங்கியதும், கருத்துள்ளோர் அனைவருக்கும் தெரிந்தது. அப்படிப்பட்டவர்களிலே ஆண்மையாளர்கள் சிலர். இந்த அந்தி ஒழிக்கப்படவேண்டும் என்று கூறினர்—வகுப்பு நீதி கேட்டனர்—அந்த வகுப்பு நீதி கோரிக்கை, தங்கள் ஆதிக்கத்துக்கு உலை வைப்பதாகும் என்று எண்ணிய பார்ப்பனர், நீதி கேட்டவர்களை வகுப்பு வாதிகள் என்றனர்—அந்தச் சொல், நிபந்தனைப் பதமாகி, தக்க பிரசார சாதனம் இருந்த காரணத்தால், வகுப்பு நீதி கோரியவர்களை, வகுப்பு வாதிகள் என்று பொதுமக்களே எண்ணி ஏசுக்கூடிய ஓர் வேதனையான நிலைமையை உண்டாக்கி விட்டது.

பிரசார பீரங்கிகள் முழங்கின ! எங்கும் !! வகுப்பு வாதி ! வகுப்புவாதி!! கண்டனக் கணைகள் சரமாரியாகக் கிளம்பின. பலருடைய அரசியல் வாழ்வை, வதைத்தன—இருதயங்களைச் சிதைத்தன ங்கிரஸ் மேடை ஏறினதும், சபாஷ் பட்டமும், பத்திரிகையில் இடமும் பெற வேண்டுமானால், வெகு சுலபம். வகுப்பு வாதிகளைக் குழி தோண்டிப் புதைப்போம் என்று கூறினால் போதும் கடந்த இருபதாண்டுகளாக, தமிழ் நாட்டு அரசியலில், இந்த அணுகுண்டு உபயோகப்படுத்தப்பட்டது, நீதி கேட்டவர்களுக்கு எதிராக.

இப்போது காங்கிரசிலேயே ஒரு பகுதி, மற்றோர் பகுதியை வகுப்புவாதி என்று குற்றம் சாற்றுவதைக் காண்கிறோம்

வகுப்புவாதி என்று முதன் முதல், அனியாயமாக நிந்திக்கப்பட்ட நீதிக் கட்சியினர் செய்ய விரும்பியதெல்லாம், பெரும்பான்மையினராக உள்ள பார்ப்பனரல்லாதாரை, அவர்களின் வீழ்ச்சியுற்ற, தாழ்நிலையிலிருந்து, எழிச்சியுறச் செய்து, சம உரிமை பெறச் செய்வது என்பது தான். இதற்குத் தான் வகுப்பு வாதம் என்று பெயரிடப்பட்டது.

“தமிழ் நாட்டில் ஒரு விஷமப் பிரசாரம் சமீப காலத்தில் நடந்து வருகிறது. மெஜாரிட்டி வகுப்பாரைத் தூக்கி விடுவதற்கு என்ன நடவடிக்கை எடுத்தாலும், உடனே அதைப் பிராமணத் துவேஷம் என்று சொல்லுகிறார்கள்," என்று தினசரி,