பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37



உற்பத்திப் போரை நடத்தியே தீருவதென "பித்தம்" பிடித்து அலைந்தாரே. அத்தகைய "பித்தம்" நமக்கு இருக்கிறது என்பதை நாம் மறுக்கவில்லை.

எதிர்த்தோர், பாஸ்ட்டில்லி (சிறைக்கூடம்) யில் இருதயவலியுடன் இருப்பது தெரிந்தும், ஈட்டி ஏந்திய வீரர்கள் குதிரைகளின் மீதேறி, மக்களை குத்திக்கொல்வர் என்பது தெரிந்தும் முடி ஆட்சியை எதிர்த்து குடி ஆட்சியை ஏற்படுத்தியே தீருவோம் என்று பிரான்சு நாட்டு மக்கள், புரட்சிப் பித்தம் கொண்டார்களே முன்னம், அத்தகைய பித்தம் நமக்கு உண்டு.

  • பல ஆயிரம் ஆண்டுகளாக நாட்டிலே பரவி ஊன்றி, பாமரரை செயலற்ற, சிந்தனையற்ற உருவங்களாக்கி, உழைக்க வைத்து உறிஞ்சி வாழும் பார்ப்பனியத்தின் பலம் பயங்கரம். பக்க பலம் யாவும் நமக்கு நன்கு தெரிந்திருந்தும், அதனை ஒழித்தே தீருவோம், என்று "பித்தம்" பிடித்தே நாம் அலைகிறோம். பித்தர் லெனின் சோவியத் நாட்டை கண்டது போல், பெரியார், திராவிட நாட்டைக் காணட்டும் என்று கூறுகிறோம்.

ஏனய்யா இத்தனை ஆத்திரம் ? எதற்கு. ஒரு சிறு கூட்டத்தினரான பார்ப்பனர் மீது இத்தனை துவேஷம் ? என்று கேட்கிறார்கள், தோழர்கள். பார்ப்பனர் மீது பாய்வது ஒரு வீரமா? வேதியர் மீது ஏன் வீணாக மோதிக் கொள்கிறீர் என்று கேட்கிறார்கள். அவர்களை இங்ஙனம் கேட்கவைக்கும் பார்ப்பனருங்கூட இது போலவே கேட்கக்கூடும்; ஆகவே அவர்களுக்கும் அவர் தம் அடியார்களுக்குமாகச் சேர்த்தே கூறுகிறோம். நாம் பார்ப்பனர் மீது மோதிக் கொள்ளவில்லை; பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம்.

  • பார்ப்பனீயத்தினால், பார்ப்பனர் என்ற சமூகம், பாடுபடாது வாழவும், பதமாக இருக்கவும் பதவியில் அமரவும் முடிகிறது என்ற "வெறும் பொறாமை" மட்டுமல்ல, நாம் அதனை எதிர்ப்பதற்குக் காரணம்.
  • பிளேக் பிடித்த வீட்டிலே பாயையும்தலையணையையும் போட்டுக் கொளுத்துகிறார்கள் என்றால், பாய்மீதும் தலையணை