பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38



மீதும் கோபம், துவேஷம் என்று பொருள் கொள்ள முடியுமா ! பிளேக்கால் பீடிக்கப் பட்டவனுக்கு "ஊசி" போடுகிறார்கள் என்றால், டாக்டருக்கு அந்த நோயாளிமீது, துவேஷம் என்று பொருள்கூற முடியுமா ? அதுபோல்தான், இந்தப் பழைய பெரிய பூபாகத்திலே, பார்ப்பனீயம் என்ற கொடுமை இருக்கிறது.

  • பார்ப்பனீயத்தின் பலனாக ஒரு பெரிய திராவிட சமுதாயம் சின்னாபின்னப்பட்டுப் போய்க்கிடக்கிறது. பிறவி அடிமைகளாக, பேசும் ஊமைகளாக, நடைப்பிணமாகப் போய்விட்டது, ரோஷமான உணர்ச்சியற்று தடித்த தோலராகி விட்டது.
  • தகப்பனுக்கு மேக வியாதி இருப்பின், பிறக்கும்குழந்தை குருடாகும், என்பர் மருத்துவ நூல் கற்றோர். குருட்டுக் குழவிக்கு, குவலயத்தின் குதூகலக் காட்சி எங்ஙனம் தெரியும்? அதுபோல்தான் திராவிடச் சமுதாயம், பார்ப்பனீயம் எனும் மேக நோயால் பிடிக்கப்பட்டு இருக்கிறது. பிறக்கும் திராவிடன் குருடனாகிறான். எனவேதான் இந்தப் பார்ப்பனீயத்தை ஒழிக்க விரும்புகிறோம்.
  • ஒற்றுமை, கட்டுப்பாடு, வீரஉணர்ச்சி, தன்மானம், இவைகள் ஒரு பெரிய சமுதாயத்துக்கு வந்தால்தான் ஏகாதிபத்யத்தை எதிர்த்து வெல்ல முடியும். இக்குணங்கள் இன்று நம் மக்களிடை இல்லாது போனதற்குக் காரணம் பார்ப்பனீயந்தான். எனவேதான் நாம் அதனை எதிர்க்கிறோம், முடியுமா வெல்ல என்பர், முடிவைப்பற்றிக் கவலை இல்லை, கடமை இது என்போம், வெற்றி கிடைக்காதா? என்பர். வெள்ளி முளைக்குது என்போம் என்று தீட்டிற்று.

வெள்ளி முளைக்குது! என்றோம், எட்டு ஆண்டுகள் பிடித்தன வெள்ளி, தினசரி நிலையத்திலே இருந்து கிளம்ப பட்டகஷ்டம் வீண் போகவில்லை. யார் உ ண்மை வகுப்பு