பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39



வாதிகள் என்பதை நாடு உணரத் தொடங்கி விட்டது. வேதனைக்கு ஆளான ஓமந்தூராரும், வேல் தாக்கிய வேழமெனச்சீறும் தினசரியும், பார்ப்பனீயம் என்பது பிரித்தானியம் போலவே, ஒழிக்கப்பட வேண்டிய முறைதான் என்பதை, ஆண்மையுடன் அறிவித்துவிட வேண்டும். மெள்ள மெள்ள நகருவோம், என்பதில் பலன் இல்லை. பார்ப்பனியத்தைக் காரணம் காட்டி ஆதரிக்க எந்த அறிவாளியும் முன் வரமுடியாது. அந்த முறையை முறியடிக்கப் போரிடுவதால், ஓமந்தூராருக்கும், அவரை ஆதரிப்போருக்கும், வகுப்புவாதி என்ற தூற்றனலுடன், ஒரு சம்யம் நாத்தீகர் என்ற ஏசல் கிடைக்கக்கூடும்—ஆனால் நெஞ்சில் கைவைத்து நேர்மையாக நடக்க விரும்பும் யாரும், தூற்றலையும் ஏசலையும் பொருட்படுத்தக் கூடாது. பொருட்படுத்த மாட்டார்கள் எவ்வளவு நியாயமான காரியத்தைச் செய்தாலும். அதனால் யாருடைய ஆதிக்கமோ சுயநலமோ கெடும் என்று தெரிந்திருந்தால் அவர்கள் ஏசவும் செய்வர்—தூற்றவும் செய்வர்— * எவ்வளவு இன்சொல்லால், அன்பையும் சக்தியையும் உத்தமர் காந்தியார் போதித்தார்! கோட்சே இதற்கே அவரைக் கொல்லத் துணிந்தானல்லவா! உத்தமர் உண்மைக்காக உயிரைத் தந்தபோது, நாம் சாதாரணப் புகழை, பதவியை இழந்தால்தான் என்ன? நஷ்டம் அல்ல—நாட்டுக்கு விமோசனம் கிடைக்கும்.