பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


அடங்கியிருக்கின்றக் என்பதாகக் காரணங்காட்டி மாகாண சர்க்கார் மேற்கண்ட உத்தரவை ௸ சட்டத்தின் 7-வது பிரிவைச்சேர்ந்த (3) உட்பிரிவின்கீழ் பிறப்பித்துள்ளனர்.

மேல் குறிப்பிடப்பெற்ற இரு இதழ்களிலுமிருந்தும் ௸ உத்தரவுக்குக் காரணமான பகுதிகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பெற்று அவ்வுத்தரவுடனேயே இணைக்கப்பட்டிருந்தன. மனுதாரர் இவ்விண்ணப்பத்தை ௸ சட்டத்தின் 23-வது பிரிவின் கீழ் சமர்ப்பித்துள்ளார். இந்நீதிமன்றம் தீர்ப்புக்கூற வேண்டியது இதுதான். இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப் பெற்றிருக்கும் அப்பத்திரிகையில் ௸ சட்டத்தின் 4(1) (யெச்) பிரிவின் கீழ் விவரிக்கப்படுவதை யொத்த தன்மை வாய்ந்த சொற்கள் எவையும் காணப்படுகின்றனவா இல்லையா என்பதேயாகும்.

4(1) (யெச்) பிரிவின் வரையறைக்குள் விவரிக்கப்படும் சொற்கள்:

"மன்னர்பிரான் குடிமக்களாகிய பல்வேறுபட்ட வகுப்பினரிடையே பகைமை யுணர்ச்சியையோ வெறுப்புணர்ச்சியையோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ வளர்க்கக் கூடிய்" சொற்களாகும்.

மூலாதார விதியோடு கூடிய 4-வது விளக்கம் கூறுவ- தாவது:--

"மன்னர் பிரானின் குடிமக்களாகிய பல்வேறுபட்ட வகுப்பினரிடையே பகையுணர்ச்சியையோ வெறுப்புணர்ச்சியையோ வளர்க்கின்ற அல்லது வளர்க்கும் தன்மைவாய்ந்த விஷயங்களைக் குறிப்பிடுகின்ற சொற்கள், கெட்ட எண்ணத்தோடன்றி அத்தகைய விஷயங்கள் அகற்றப்படவேண்டுமென்ற நன்னோக்கத்தோடு உபயோகப்படுத்தப்பட்டிருந்தால், அத்தகைய சொற்கள் இவ்வுட்பிரிவின் (யெச்) விதியில் விவரிக்கப் பெற்றுள்ளனவற்றைப்போன்ற சொற்களாகக் கருதப்படமாட்டா."