பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46


கூறியுள்ளார். கட்டுரையின் போக்கையுணர்த்த ஒரு சில பகுதிகளே போதுமானது.

"நாம் நாற்பது கோடி மக்கள்--ஆனால் நாலாயிரம் ஜாதிகளாகப் பிரிந்து பிளவுபட்டுப் பாழானோம். உன் ஜாதி பெரிது, என் ஜாதி உயர்ந்தது, நீ மட்டம், நீ தாழ்ந்த ஜாதி என்று நமக்குள் சண்டையிட்டு நாசமானோம். இதைச் சாதகமாக்கிக் கொண்டான் அன்னியன். பாழான சாதி பேதம் இந்த நாட்டில் இருக்கும் வரையில் நாடு உருப்படாது. வீணான ஜாதி பேதத்தாலே தான் நம் நாடு, வெள்ளைக்காரனிடம் இவ்வளவு காலம் அடிமைப்பட்டுக்கிடந்தது. தமிழர்கள் ஜாதி பேதத்தை அடியோடு விட்டொழிக்கவேண்டும். ஒன்றேகுலம்-- ஒருவனே தேவனும். நமக்குள் ஒற்றுமைவேண்டும். வகுப்புவாதம்கூடாது"

பின்னர், கட்டுரையாளர் சமூக நீதிக்காக பேராட்டம் பற்றிப் பேசப் புகுந்து, 'வகுப்புவாதி' என்ற சொல்வகுப்பு நீதிக்காகப் பாடு படுவோரைத் தூற்றும் வகையிலேயே உபயோகிக்கப்படுகிறதெனக் கூறுகிறார். ஹிந்து சமுதாயத்தில் பெரு வாரியான மக்கள் பிராமணரல்லாதாரேயென்றும், பிராமணர் சிறு பான்மையினரேயென்றும் குறிப்பிட்டு, ஆனால் அப்பெருவாரி மக்களே௸சிறுபான்மையானவரை உயர் ஜாதிக்காரர்களாக நினைந்தொழுகி வருகிறார்களென்றும் கட்டுரையாளர் நடப்பை எடுத்துக் காட்டுகிறார். சாஸ்திர சம்பிரதாய பழக்க வழக்கங்களை யொட்டியே இந்நிலை நீடித்து வருகிறதென்றும் இதன் காரணமாகவே பெருவாரியான மக்கள் கல்வி—தொழில்—பொருளில்—அரசியல்—மதியல இன்ன பிறதுறைகளில் உரிய அளவு வாய்ப்பு வசதிகள் கிடைக்கப் பெறாதவராய் நிற்க, சிறுபான்மை வகுப்பினராகிய பிராமணர்கள் அனைத்து துறைகளில் பெருத்த அளவுக்கு முன்னேற்றங்கண்டுள்ளனரெனக் கட்டுரையாளர் மேலும் கூறுகிறார். சமூகநீதிக் கோரிக்கையை முற்ற விட்டால் தங்கள் ஆதிக்கத்துக்கு ஆபத்து வந்துகிட்டுமென்றுணர்ந்த பிராமணர்கள் நீதி