பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49



ஜாதிகள்பற்றிக் குறிப்பிடுகிறாரெனினும், இறுதியில் ஒரே குலத்தவராய் அனைவரும் திகழ்தல் வேண்டுமென்பதை வலியுறுத்துகிறார். பிராமணர்களை ஒரு பக்கமும், இதர ஜாதியார்களை மற்றொரு பக்கமும் வைத்தே பேசப்படுகிறது. கட்டுரை முழுவதையும் படித்துப் பார்த்ததில் எங்களுக்குத் தோன்றுவது என்னவெனில் சமுதாயத்தில் பிராமணர்கள் உயர்நிலை அடைவதற்கு ஆதரவாயிருந்த முறையினை. அது ஜாதி முறை என்றழைக்கப்பட்டாலுஞ் சரி, பிராமணீயம் என்றழைக்கப்பட்டாலுஞ் சரி, அந்த முறையினையே கட்டுரையாளர் காய்கிறார், இக்காலத்திய பிராமணர்கள்தான் இதைத்தான் செய்து விட்டார்களென்பதாகக் கட்டுரையில் எங்கும் குறிப்புக் காணப்படவில்லை. "கடந்த ஆயிரமாயிர மாண்டுகளில்" இம்முறையானது பரவி வேரூன்றி விட்டதென்பதே கட்டுரையாளரின் புகாராகும். பிராமணர்கள் மீது தனிப்பட்ட முறையில் தனக்கு எவ்வித வெறுப்பும் இல்லை என்பதைக் கட்டுரையாளர் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதோடு, ஒழிக்கப் பெறவேண்டியது அந்த முறைதானென்பதைத் திட்டமாகக் கட்டுரையின் பல இடங்களில் கூறியுள்ளார். பிராமணர்கள் மீது பிராமணரல்லாதார் பகைமையுணர்ச்சியோடு நடந்துகொள்ள வேண்டுமென்றோ அல்லது வெறுப்பு காட்ட வேண்டுமென்றோ தூண்டிவிடும் போக்கு கட்டுரையின் எப்பகுதியிலும் காணப்படவில்லை. ஆர்க்குமெண்டின்போது எங்களுள் ஒருவர் குறிப்பிட்டது போல, கட்டுரையாளரின் கருத்துப்படி அம்முறையை ஒழிப்பதற்கான ஒரேவழி, பெரும்பான்மை மக்கள் சமூகத்தார் தங்களது தாழ்வு மனப்பான்மையை விட்டொழித்து ஒற்றுமை, ஒழுங்கு, தன்மதிப்புடன் நடந்துகொள்ளப் பழகுவதேயாகும். மேலே நாங்கள் எடுத்துக்காட்டியிருக்கும் கட்டுரைப் பகுதியைத் தவிர்த்து வேறு எந்தப் பகுதியிலும் அதிகப்படியாகவோ கடுமையாகவோ வார்த்தைப் பிரயோகம் கிடையாது.

யாதொரு வகுப்பு அல்லது ஜாதியின் துயரங்களை எடுத்துரைக்கப் புகும் கட்டுரையாளரொருவர், இவ்விஷயத்தில் நேர்மையற்ற முறையில் நடந்துகொள்வதாகக் கருதப்படும் வகுப்பு அல்லது ஜாதியை சிறிது கடுமையாகவே தாக்குதற்கு