பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


டுகிறார். திட்டவட்டமாக சிறிதும் ஒளிவு மறைவு இல்லாமல், ஜாதி முறையைப் புகுத்திய நல்லவர்களை,

"பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்மின்
நால்வகை சாதியை நாட்டினில் நாட்டினீர் நீர்”

காலஞ் சென்ற கவிபாரதியார் ஒரு பார்ப்பனர். வாழ் நாட்களில் எப்படி எப்படியோ வாழ்ந்தார். அவரும் பார்ப்பனர் எத்தகையப் போக்கினர் என்பதை வெட்ட வெளிச்சமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

"பேராசை கொண்டவனடா பார்ப்பான். அவன்
பெரிய துரை எனில் உடல் வேர்ப்பான்"

'ஆசை--அச்சம்' இந்த இரு பண்புகளிலும் பார்ப்பனர் உச்சத்தில் இருப்பவர்கள் என்று பாரதியார் சொல்லி இருக்கிறார்.

பார்ப்பனரின் பண்புகளை எடுத்துக்கூறும் இந்தப் பாட்டுகளையும், கூறிய புலவர்களையும் என்ன செய்வது? புலவர்கள் தான் மறைந்து விட்டார்கள் என்றாலும், ஏடுகள் இன்னமும் நாட்டு மக்களிடை நடமாடிக்கொண்டுதானே இருக்கின்றன?

"பார்ப்பனர் வீட்டுப் பசுமாடு போல" என்று எடுத்துக் கூறி, பார்ப்பனர்களின் கல் நெஞ்சை படம் பிடித்துக் காட்டுகிறார் நாடாளும் முக்கியஸ்தர் ஒருவர். அவர் பழங்குடி மக்களைச் சேர்ந்தவரும் அல்ல பரங்கித் துரையும் அல்ல, ஒரு முதல் தரமான பார்ப்பனர், பார்ப்பன இனத்தின் பாதுகாவலர். கண்ணன் காட்டிய வழியில் விழி வைத்து வாழ்க்கையை நடத்திச் செல்லுபவர். இம்மாகாண முதலமைச்சராக உள்ள சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரே, மேல்குறித்துள்ளபடி பார்ப்பனரைக் குறித்துக் குறை கூறியுள்ளார். பாம்பின் கால் பாம்பிற்குத் தானே தெரியும்? தன் இனத்தின் அருமை பெருமைகள் தனக்குத் தெரியாமல் இருக்க முடியுமா?