பக்கம்:இதயகீதம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிநிகர் மாந்தர் 3 தென்னாட்டு மக்கள் - எதிரிகளைப் போரிட்டு முறிய டிக்கும் சிந்துகளைப் பாடிக்கொண்டிருப்பது! கேட்டாலே மயிர் சிலிர்க்கும்-கிழவனும் குமர னாவான், தீந்தமிழ் தரும் வீரப் பண்ணொலியைக் கேட்டால். வேலே கை, விரலே வாள், வேழமே கவசம், வீரமே பேச்சு, வெற்றியே மூச்சு என்று விருது பாடி பாசறை யிலே கூடி, பகைவரைச்சாடி வெற்றிபெற்றோ; இன் றேல், விலாவிலே வில்தாக்க, வேல் பாய, வீழ்ந்து இறந்து போன மகனைக் கண்டும் மனங் குலையா மாதரசிகள்- மகன் மார்பிலே வேல் தைக்க இறந்தானா அல்லது முது கிலே வாள் தாக்க மடிந்தானா என்று பீணக்குவியலைப் புரட்டிப் பார்த்து பெருமூச்செறியும் வீரத் தாய்மார் விளையாடிய தண்டமிழ் நாடு இது. இன்று எலியென் றால் கிலிகொண்டோடும் இழிநிலையிலிருக்கிறது! புலி நிகர் மாந்தர் நாம் என்று முரசு கொட்டி முத்தமிழ் வளர்த்த மூவேந்தரின் பரம்பரையினர் இன்று முது கெலும்பு ஒடிந்து, மூளைப்பலம் அற்று 'முத்தண்ணாக்க' ளாகிவிட்டனர் ! வீரம் மட்டுமல்ல, விவேகமும் காதலும் தவழ்ந்து விளையாடியது, இத்தண்டமிழ்ச் சோலையில், களிறு எறிந்து, தன் காதலியைக் கைபிடிக்கும் காளைகள், மடலேறி மணவினை நடாத்திய மாவீரர்கள் வாழ்ந்தனர்! வாழ்வில் இன்பமும் வீரமும், குதித்துக் கூத்தாடியது ! குறிஞ்சியும், மருதமும், முல்லையும், நெய்தலும் காதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/10&oldid=1740307" இலிருந்து மீள்விக்கப்பட்டது