பக்கம்:இதயகீதம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதய கீதம் கிளிகளின் கவிதைத் தமிழ்ப் பேச்சால் களிப்படைந் து கிடந்தன- என்று அழகுபடக் கூறும் அகமும், அவர்தம் வீரஞ்சாற்றும் புறமும், இன்பத்தொகையெனும் எட்டுத் தொகையும்,பாலின் சுவையெனும் பத்துப் பாட்டும், பற்றியிழுக்கும் பதினெண்கீழ்க்கணக்கும், சிலம்புச் செல் வமும், ஜீவகமணியும், மணிமேகலையும், குன்றாப் புகழும் குவலயச் சிறப்புமிக்கத் தமிழ் மொழி, இன்று தவித்திடும் தாயாகி விட்டதுகணவனையும் கண்ணென நம்பிய குழந்தைகளையும் இழந்து ஏமாந்த விதவையாகி நிற்கிறது! வீரம் செறிந்த நாட்டில் சோர்வப் பேச்சுகள்- வெற்றி முரசம் எதிரொலித்த தாயகத்தில் வெட்டிக் கூச்சல்கள்! வீரமண்- வீண் பூமியாசி விட்டது. விவே கம் குறைந்துவிட்டது. வாழ்ந்தவர் -வீழ்ந்து விட்டனர்! வெற்றிக் காதைகள், பண்டைத் தமிழரின் வெஞ்சமர்ச் செய்திகள். அள்ளும் அசும், துள்ளும் புறம் எல்லாம் மக்கள் மனத்திரையிலிருந்து மறைந்துவிட்டன! இயலும், இசையும், கூத்தும் இந்நாட்டு மொழியின் மூன்று குழந்தைகள்! இயல் இன்பந்தரும் கற்கண்டு, இசை நெஞ்சையள்ளும் கவிதைச் சுரங்கம், கூத்து எண் ணங்களை நடித்துக் காட்டி இன்பங்கொள்ளது. இது மூன்றும் அடங்கிய தமிழ்-முத்தமிழ், தமிழ் மறவரின் முரசமாயிருந்தது. இன்று முரசத்தில் ஆங்காங்கு துவா ரங்கள் ஏற்பட்டுவிட்டன-தானாக அல்ல, வயதேறிய காரணத்தால் அல்ல. வஞ்சக நினைப்பும், குழ்ச்சிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/11&oldid=1740308" இலிருந்து மீள்விக்கப்பட்டது