புலிநிகர் மாந்தர் 5 செயலும், சூது மதியும் கொண்டோரின் சுயநலச் சூறா வளியால். முத்தமிழ் முரசத்திலிருந்து எழும்பும் வீர ஒலி, காதல் மொழி, இன்பவழி எல்லாம் கொள்ளைபோ கும் நிலையில், மாற்றாந்தாய் மனப்பான்மையினர் புகுந்து விட்டனர். தன்னம்பிக்கை, தற்பெருமை குறித்த தருக்கு, தன் காட்டைப்பற்றியச் செருக்கு கொண்டு வாழ்ந்த தமிழ் மரபு, இன்று தண்டு தூக்கியவனுக்கெல்லாம் தலை வண ங்கும் தன்மையதாகிவிட்டது. அல்லல் போம், வல்வினை போம், அன்னை வயிற்றிற் பிறந்த தொல்லை போம் போகாத் துயரம் போம்-நல்ல குணமதிக மாமருணைக் கோபுரத்துள் வீற்றிருக்குங், கண பதியைக் கைதொழுதக்கால் என்று ‘ஏன் பிறந்தேன் ஈசா, என்னை இறக்கச் செய்வாய் விரைவில் பரமேசா என்று பாடக்கூடிய வெறுப்புத் துறவு, வீரப் பரம்பரை யினர் வாழ்வில் புகுந்து விட்டது. 'விதி! எல்லாம் அவன் செயல்! என்னால் என்செய இயலும்' என்ற தன்னம் பிக்கையைக் கொள்ளை கொள்ளும் நச்சரவங்கள், நஞ்சுக் கொள்கைகள்,நம்மவர் இதயத்தில் இடம் பெற்றுவிட் டது - எப்படியோ என்று அல்ல இன்னொரு இனத்தின் கலாச்சாரப் படையெடுப்பும், மொழிப்போரும் தமிழைச் சிதைத்துச் சித்திர வதைக்குள்ளாக்கிவிட்டது. தாசியின் மோசப் பேச்சில் மயங்கி, தாயை இழந்த தன்மையனானான் தமிழன் - தென்னாட்டு மகன், திராவிட வீரன்! காலைக் கதிரின் கண்கவர் காட்சி, மாலை மதியத்தின் மண்புகழ் மாட்சி, கோல மயிலின் ஒய்யார ஆட்டம்,
பக்கம்:இதயகீதம்.pdf/12
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை